கோவா மாநிலத்தில் முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார் - அமித்ஷா அறிவிப்பு


கோவா மாநிலத்தில் முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார் - அமித்ஷா அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2018 1:45 PM GMT (Updated: 23 Sep 2018 1:45 PM GMT)

கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார் என அமித்ஷா அறிவித்துள்ளார்.


புதுடெல்லி,  


கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) நீண்ட காலமாக கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். இப்போது 15ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, கோவா மாநிலத்தில் முதல்–மந்திரி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சிமைக்க உரிமை கோரியது. 

இந்நிலையில் பிராந்திய பா.ஜனதா தலைவர்களுடன் கட்சியின் தேசியத்தலைவரான அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 
கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார் என அமித்ஷா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் ‘‘கோவா மாநில முதல்–மந்திரி பதவியில் மனோகர் பாரிக்கர் நீடிப்பார். ஆனால் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும்; மந்திரிகளின் துறைகள் மாற்றப்படும” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story