சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி


சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை  திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Sep 2018 5:59 AM GMT (Updated: 24 Sep 2018 5:59 AM GMT)

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது. 

இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பாக்யோங் பகுதியில் சுமார் 201 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 5 லட்சம் பயணிகளை கையாளும் வசதிக்கொண்ட இந்த விமானநிலையத்தை அமைப்பதற்கு ரூ.553 கோடி செலவிடப்பட்டுள்ளது.  

மாநிலத்திலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிக்கிம் மாநில முதல் மந்திரி பவான் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள  பாக்யோங் விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த கட்டணமான ஸ்பைஸ் ஜெட் விமானநிறுவனம் இந்த விமான நிலையத்திற்கு வெள்ளோட்டமாக விமானங்களை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story