தொடர்ந்து பெய்யும் கனமழை: பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #PunjabRain
சண்டிகார்,
இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சலபிரதேசம், ஜம்மு, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த மழை வெளுத்து வாங்குகிறது. மழையால் நெல் மற்றும் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள சட்லஜ், பியாஷ் மற்றும் ராவி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே போல் யமுனா ஆற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் நேற்று 145 மி.மீ. மழை பதிவானது. இதனால் தங்கக்கோவில் செல்லும் வழியெங்கும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பல மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல் அறுவடைகாலம் நெருங்கும் நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story