மத்தியில் வலிமையான அரசை மக்கள் விரும்புகிறார்கள்; உத்தர பிரதேச துணை முதல் மந்திரி


மத்தியில் வலிமையான அரசை மக்கள் விரும்புகிறார்கள்; உத்தர பிரதேச துணை முதல் மந்திரி
x
தினத்தந்தி 24 Sep 2018 10:16 AM GMT (Updated: 24 Sep 2018 10:16 AM GMT)

மத்தியில் வலிமையான அரசை மக்கள் விரும்புகிறார்கள் என உத்தர பிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் கூறியுள்ளார்.

லக்னோ,

வருகிற 2019ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  உத்தர பிரதேசத்தில் இருந்து 80 மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.  உத்தர பிரதேசத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மிக பெரிய கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.  இதற்காக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆர்வமுடன் உள்ளது என தெரிவித்தது.

இதுபற்றி உத்தர பிரதேச துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் கூறும்பொழுது, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செயல்கள் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்.  இது பாரதீய ஜனதாவின் தேர்தல் முடிவுகளில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்த போவதில்லை.

வலிமையான அரசு மத்தியில் அமையவே மக்கள் விரும்புகின்றனர்.  ஆதரவற்ற அரசை அல்ல.  கடந்த 2014  மற்றும் 2017ம் ஆண்டுகளில் கிடைத்த வெற்றியை விட 2019ம் ஆண்டில் கூடுதல் தொகுதிகளை வருகிற மக்களவை தேர்தலில் பெறுவோம்.  பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முழு ஆதரவு எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story