குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு


குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2018 1:42 AM GMT (Updated: 2018-09-25T07:12:56+05:30)

குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்.பி., எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை விதிப்புக்கு ஆளாகும் எம்.பி., எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உள்ளிட்டோர் பொதுநல மனுக்களை தொடுத்தனர்.

அந்த மனுக்களில், கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை(இன்று_ தீர்ப்பு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

Next Story