நடுவானில் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபர்

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயன்றார்.
அதை பார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த பயணியை தடுத்து நிறுத்தினார்.
கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும்.
விமான நிலையத்துக்கு விமானம் வந்த பின்னர் குறித்த வாலிபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாலிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் முதல் விமான பயணம் இது என்பதால் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முயன்றதாக கூறியுள்ளார்.
Related Tags :
Next Story