டெல்லி பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி; போலீஸ் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு


டெல்லி பாராளுமன்றம்  நோக்கி விவசாயிகள் பேரணி; போலீஸ் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு
x
தினத்தந்தி 2 Oct 2018 12:40 PM IST (Updated: 2 Oct 2018 12:40 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் இருந்து டெல்லி ராஜ்காட் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்தனர்.

புதுடெல்லி

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  70000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தரகாண்டில் இருந்து டெல்லி பாராளுமன்றம்  நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர். ஹரித்வாரில் இருந்து ஏராளமான வாகனங்களில் புறப்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விரைந்தனர். பெரும் திரளாக வந்த விவசாயிகளை உத்தரபிரதேசம் - டெல்லி எல்லை பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 



இதனால் வாகனங்களில் இருந்து விவசாயிகள் இறங்கி பேரணியாக டெல்லியை நோக்கி முன்னேறினர். தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் விவசாயிகளை தடுத்தனர் , எனினும் தடுப்புகளை மீறி விவசாயிகள் முன்நோக்கி சென்றனர். இதனால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.


1 More update

Next Story