தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- சோனியாகாந்தி

மகாராஷ்டிராவின் வார்தாவில் சவக்ராம் ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை ராகுல் காந்தி- சோனியாகாந்தி கழுவினர். #SoniaGandhi #RahulGandhi
மும்பை
மகாராஷ்டிராவின் வார்தாவில் சவக்ராம் சாப்பிட்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவினர். மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தட்டுகள் கழுவ ஒரு குழாய் அருகே அவர்கள் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்த தினத்தையொட்டி, பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காதியும் , சோனியா காந்தியும் சவக்ராம் ஆசிரமம் சென்று இருந்தனர். இந்த நிழக்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராகுல் 1986 ஆம் ஆண்டு தனது தந்தையும் முன்னாள் பிரதம மந்திரி மறைந்த ராஜீவ் காந்திநினைவாக இந்த ஆசிரமத்தில் மரகன்று ஒன்றை நாட்டு இருந்தார். இது ராகுல் ஆசிரமத்திற்கு இரண்டாவது முறையாகும். அவர் முன்னர் ஜனவரி 24, 2014 அன்று ஒரு மரக்கன்றை நட்டு வந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, முன்னாள் அரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹூடா மற்றும் முன்னாள் உத்தரகண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் ஆகியோர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
#WATCH: Sonia Gandhi and Rahul Gandhi wash their plates after lunch in Sevagram (Bapu Kuti) in Wardha. #Maharashtrapic.twitter.com/hzC3AGe7kj
— ANI (@ANI) October 2, 2018
Related Tags :
Next Story






