கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை: இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு


கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை: இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 6:55 PM IST (Updated: 3 Oct 2018 6:55 PM IST)
t-max-icont-min-icon

கேரளா தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும்  கேரளாவை  அண்மையில் வரலாறு காணாத மழை வாட்டி வைத்தது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது.. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன.

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டும் தற்போது ஏறக்குறைய இயல்பு நிலையை கேரளா எட்டியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அம்மாவட்டங்களில் ”ரெட் அலர்ட்”  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story