பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரசில் சேருகிறார்

ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரசில் சேர உள்ளார்.
ஜெய்ப்பூர்
பா.ஜ.க முன்னாள் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் காங்கிரசில் சேர உள்ளார். கடந்த 23 நாட்களுக்கு முன் மன்வேந்திர சிங் பாரதீய ஜனதாவை விட்டு விலகினார்.
ஆனால் இந்த தகவலை மன்வேந்திர சிங் மறுத்து உள்ளார். இது போல் ஷியோ தொகுதி எம்.எல்.ஏ.வும் அவரது மனைவியுடன் புதன்கிழமை காங்கிரசில் சேர உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் பார்மேர் நகரில் வசுந்தரா ராஜே தலைமையில் நடைபெற்ற பேரணியில் இருந்து மன்வேந்திர சிங்கும் அவரது மனைவியும் வெளியேறினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜஸ்வந்த் சிங், 2014 பொதுத் தேர்தலில் டிக்கெட் மறுக்கப்பட்டு, பி.ஜே.பி.யுடன் சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது.
ஜஸ்வந்த் சிங் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் பி.ஜே.பி யின் கர்னல் (ஓய்வு) சோனாராம் சவுத்ரியிடம் தோல்வியடைந்தார். மக்களவைத் தேர்தலில் அவரது தந்தை ஜஸ்வந்த் சிங்குக்காக மன்வேந்திர சிங் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஆதரவாக மன்வேந்திர சிங் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என தேர்தலுக்கு முந்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.
Related Tags :
Next Story