துர்கா பூஜையின் போது தொடர் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை


துர்கா பூஜையின் போது தொடர் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 6:34 AM GMT (Updated: 2018-10-16T12:04:30+05:30)

துர்கா பூஜையின் போது தொடர் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில், துர்கா பூஜையின் போது, தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த வங்காளதேசத்தில் உள்ள பயங்கரவாத இயக்கமான  ஜமாத் உல் முஜாகீதின் அமைப்பு  திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவலின் படி, ஜேஎம்.பி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள், மேற்கு வங்காளத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், வடக்கு பெங்கால், ஜல்பைகுரி, கோச்சேபர், சிலிகுரி ஆகிய இடங்களை ஜே.எம்.பி பயங்கரவாதிகள்  குறிவைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை டி.என்.ஏ நாளிதழின் இணைய செய்தி வெளியிட்டுள்ளது. வங்காளதேச எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, எல்லை பாதுகாப்பு படைக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக உளவுத்துறை தகவல் வெளியான சில தினங்களில், மேற்கு வங்காளத்தில் வங்காளதேச பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதா தகவல் வெளியாகி இருப்பதை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story