மத்திய மந்திரி அக்பருக்கு எதிராக பிரியா ரமணிக்கு 17 பெண் பத்திரிகையாளர்கள் ஆதரவு


மத்திய மந்திரி அக்பருக்கு எதிராக பிரியா ரமணிக்கு 17 பெண் பத்திரிகையாளர்கள் ஆதரவு
x
தினத்தந்தி 17 Oct 2018 6:06 AM GMT (Updated: 17 Oct 2018 6:06 AM GMT)

மத்திய மந்திரிக்கு எதிராக பிரியா ரமணிக்கு 17 பெண்கள் பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். தங்களை சாட்சிகளாக்க கோரி உள்ளனர்.


புதுடெல்லி

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இதில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர். இந்த நிலையில், மந்திரி அக்பர் மீது இன்று கூடுதலாக 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் மற்றும் பெண் தொழிலதிபரான சுவாதி கவுதம் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.  இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

'ஆசின் ஏஜ் ' பத்திரிகையில் பணிபுரிந்த   17 பெண் பத்திரிகையாளர்கள், இணைந்து பிரியா ரமணிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். அக்பருக்கு எதிரான சாட்சியங்களை கேட்க இந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், அவர்களில் சிலர் மந்திரியின்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர், மற்றவர்கள் அதை சாட்சியாகக் கொண்டுள்ளனர்.

இவர்கள் 17 பேரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர் அதன் விவரம் வருமாறு:-

ரமணி தன் போராட்டத்தில் தனியாக இல்லை. எங்களின் சிலரின் பாலியல் துன்புறுத்தலின் சாட்சியங்களையும் கருத்தில் கொள்ளவும், இந்த தொல்லைக்கு சாட்சியாக  மற்ற கையெழுத்துப் கடைதங்களும் உள்ளன.என கூறி உள்ளனர்.

ரமணி பகிரங்கமாக அவருக்கு எதிராக பேசிய போது, அவரின் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி மட்டும் பேசினார். என கூறி உள்ளனர் தங்களை ஆட்சிகளாக அங்கீகரிக்க கூறி உள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் ஆசியன் ஏஜ் பத்திரிகையில் பணிபுரிந்த காலம் மற்றும் பெயருடன் கையெழுத்திட்டு உள்ளனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

மீனல் பகல் ஆசியன் ஏஜ்  பணியாற்றிய காலம் (  (1993 முதல் 1996 வரை) 
மனிஷாபாண்டே ( 1993-1998)
துஷிதா படேல் (1993-2000)
கனிகா கஹ்லாட் (1995- 1998)
சுர்ணா சர்மா( 1993-1996)
ரமோலா தல்வார் பதான் ( 1994-1995)
கோகினு கவுசல்( 1999-2000)
ஆஷாகான்( 1995-1998)
குசல்ராணி குலாப ( 1993-1997)
கனிசா கசாரி ( 1995- 1997)
மாளவிகா பான்ர்ஜி ( 1995-1998)
ஏ.டி ஜெயந்தி(1995-1996)
ஹமிதா பார்கர்( 1996-1999)
ஜோனலி புருகாய்ன், மீனாட்சி குமார் (1996-2000),
சுஜாதா தத்தா சச்சதேவா (1999-2000),
சஞ்சாரி சட்டர்ஜி 

Next Story