குழந்தை பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய வயது எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம் - மேனகா காந்தி


குழந்தை பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய வயது எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம் - மேனகா காந்தி
x
தினத்தந்தி 17 Oct 2018 7:37 AM GMT (Updated: 2018-10-17T13:07:59+05:30)

குழந்தை பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய வயது எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி கூறி உள்ளார்.


புதுடெல்லி

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:-

குழந்தை பாலியல் துஷ்பிரயோக பாதிப்புக்குள்ளானவர் தனது தற்போதைய வயது எதுவாக இருந்தாலும்  எந்த நேரத்திலும் புகாரளிக்கலாம்.  POCSO  இ-பாக்ஸ்  மூலம் தகவல்களை  பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கலாம். 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகள்  ஒரு குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது நெருக்கமாக அறியப்பட்டவர்களை 
குற்றவாளிகளாக அறிவிக்க முடியவில்லை. 

வாழ்க்கையில் பல குழந்தைகளுக்கு   பாலியல் துஷ்பிரயோகம்  தொடர்கிறது என்று. ஆய்வுகள் காட்டுகின்றன இந்த அதிர்ச்சியை சமாளிக்க பல குழந்தைகள் வளர்ந்த  பிறகும்  குழந்தை காலத்தில்  நடத்தப்பட்ட துஷ்பிரயோகம் குறித்து புகார் தெரிவிக்கின்றனர் என கூறினார். 

அதிகார பூர்வமாக 2012 ஆம் ஆண்டின் POCSO சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  கால வரம்பு ஏதுமின்றி  புகார் அளிக்கலாம் என சமீபத்தில் அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பாலியல் குற்ற சட்டத்தின் (POCSO) குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நவம்பர் 2012 ல் நடைமுறைக்கு வந்தது. இது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்  பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து குழந்தைகள்  பாதுகாப்பிற்கான சட்ட விதிகள் பலப்படுத்தப்படுவதற்கான பாலியல்  சட்டமாகும். 

இந்த பாதுகாப்பு சட்டம் 18 வயதிற்குக் கீழான வரை ஒரு குழந்தையை வரையறுக்கிறது மற்றும் பாலியல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் ஆகியவற்றின் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Next Story