கேரளவில் 12 மணி நேர பந்த் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து கேரளாவில் இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
திருவனந்தபுரம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 5 10 முதல் 10 வயது வரை உள்ள பெண்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலுக்கு செல்லவில்லை. போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
அதன் பேரில் இன்று கேராளவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதியில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story