அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு பியுஷ் கோயல் இந்தியா திரும்புகிறார்


அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு பியுஷ் கோயல் இந்தியா திரும்புகிறார்
x
தினத்தந்தி 19 Oct 2018 5:43 PM GMT (Updated: 2018-10-19T23:18:09+05:30)

ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

புதுடெல்லி, 

ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பஞ்சாப் ரெயில் விபத்து பற்றி அறிந்தவுடன், அவர் தனது அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, இந்தியா திரும்புகிறார் .

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘பஞ்சாப் ரெயில் விபத்தை கேள்விப்பட்டு, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Next Story