உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்


உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்
x
தினத்தந்தி 20 Oct 2018 3:39 PM GMT (Updated: 20 Oct 2018 3:39 PM GMT)

உத்தர பிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கங்கர்கேதா பகுதியில் மணீஷ் என்ற பாஜக கவுன்சிலரின் ஒட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் உணவு பரிமாறுபவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த உணவக உரிமையாளரும் பா.ஜ.க கவுன்சிலருமான மணீஷ், அந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி சரமாரியாகத் தாக்கினார்.

உடன் வந்த பெண் வழக்கறிஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களைப் போட்டு உடைத்தார். காவல் உதவி ஆய்வாளரை அடித்த பாஜக கவுன்சிலர் மணீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், காவல் உதவி ஆய்வாளரும், பெண் வழக்கறிஞரும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தாக்கியதாக மணீஷ் தெரிவித்துள்ளார். 

உணவு விடுதி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story