மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு


மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:40 AM GMT (Updated: 2018-10-21T16:10:15+05:30)

மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


சென்னை,

மீடூ மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்தார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார். பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னையில் பாடகி சின்மயியை சந்தித்த பின்னர் மாதர்சங்க துணைசெயலர் மகாலட்சுமி பேசுகையில், மீடூ விவகாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவத்திற்கு ஆதாரம் எப்படியிருக்கும்? பெண்கள் இதுபோன்று பிரச்சனைகளை வெளியே வந்து சொல்வதற்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீடூ விவகாரத்தில் மும்பையில் நிறைய புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்மட்டுதான் இந்த மாதிரியான புகார்கள் சாதிய ரீதியாக பார்க்கப்படுகிறது. பெண்கள் மீடூ மூலம் புகார்களை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். 


Next Story