கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்


கன்னியாஸ்திரி  பாலியல் பலாத்காரப் புகார் முக்கிய சாட்சி மர்ம மரணம்
x
தினத்தந்தி 22 Oct 2018 8:36 AM GMT (Updated: 22 Oct 2018 8:36 AM GMT)

பிராங்கோ மூலக்கல் மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகாரில் முக்கிய சாட்சி மர்ம மரணம் அடைந்தார்.

ஜலந்தர்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர்  பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். 

இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

இதற்கிடையில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி, பேராயர் பிராங்கோ, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், பேராயர் மூலக்கல்லுக்கு ஜாமீன் வழங்கபட்டு உள்ளது.

பிஷப் பிராங்கோ முலக்கால் கற்பழிப்பு வழக்கில்  முக்கிய சாட்சி அப்பாஸ் குரியாகோஸ் கத்துதாரா( வயது 67)  இன்று பஞ்சாப் ஜலந்தரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கற்பழிப்பு வழக்கில் பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான அறிக்கையை அளித்த பிரதான சாட்சியாக கருதப்பட்டார்.ஜலாந்தரில் உள்ள தசுயாவில்  உள்ள செயின்ட் மேரி சர்ச் உள்ளே குரியாகோஸ்  உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

Next Story