பைக் கொண்டு வர மறுத்த சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து, மொபைல் போனில் படம் பிடித்த வாலிபர்

பைக் கொண்டு வர மறுத்த சிறுவனை வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் பைப் கொண்டு அடித்து, மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மீரா சாலை பகுதியை சேர்ந்தவர் பைசல் கான் (வயது 25). சில மாதங்களுக்கு முன் 16 வயது நிறைந்த டீன் ஏஜ் சிறுவன் கானுக்கு நண்பனாகி உள்ளான். அவனது தந்தையின் பைக்கை கொண்டு வரும்படி கான் கூறுவது வழக்கம். தொடர்ந்து சிறுவனது தந்தையின் பைக்கை கான் பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 21ந்தேதி பைக்கை ஓட்டுவதற்காக கொண்டு வரும்படி கான் கூறியுள்ளார். ஆனால் இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த கான் பிளாடிக் பைப் கொண்டு சிறுவனை அடித்துள்ளார். அதன்பின் சிறுவனையும் அவனது நண்பனையும் தனது வீட்டிற்கு கான் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் 2 பேரையும் அடித்து அதனை மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார். இதுபற்றி சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் அளித்த புகாரினை தொடர்ந்து கானை நயா நகர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story