பாலியல் பலாத்கார புகார்: பிரபல சாமியார் தாதி மகராஜ் மீது சி.பி.ஐ. வழக்கு


பாலியல் பலாத்கார புகார்: பிரபல சாமியார் தாதி மகராஜ் மீது சி.பி.ஐ. வழக்கு
x
தினத்தந்தி 26 Oct 2018 1:22 PM GMT (Updated: 2018-10-26T18:52:51+05:30)

டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியார் தாதி மகராஜ்.

புதுடெல்லி, 

டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியார் தாதி மகராஜ். இவர் மீது ஒரு பெண் டெல்லி பதேபூர் பேரி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அதில் தாதி மகராஜ் தனது ஆசிரமங்களில் வைத்து தன்னை கற்பழித்து விட்டதாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மகராஜின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

இது தொடர்பாக டெல்லி போலீசார் கடந்த ஜூன் மாதம் 22–ந் தேதி தாதி மகராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தன் மீதான புகாரை சாமியார் மறுத்தார். அதன்பின்னர் போலீசார் வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சாமியார் தாதி மகராஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

Next Story