தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவிடம் சொந்தமாக கார் இல்லை சொத்து மதிப்பு ரூ.22½ கோடி


தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவிடம் சொந்தமாக கார் இல்லை சொத்து மதிப்பு ரூ.22½ கோடி
x
தினத்தந்தி 15 Nov 2018 3:05 PM GMT (Updated: 2018-11-15T20:35:19+05:30)

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவிடம் சொந்தமாக கார் இல்லை சொத்து மதிப்பு ரூ.22½ கோடி

ஐதராபாத், 

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தற்காலிக முதல்–மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இணைத்துள்ளார்.

அதில் தனக்கு ரூ.22.61 கோடி சொத்து இருப்பதாக சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு உள்ளார். கடந்த 2014–ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூ.15.95 கோடி ஆகும். அந்த தேர்தலின்போது தனக்கு 37.70 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியிருந்த சந்திரசேகர் ராவ், தற்போதைய வேட்புமனுவில் 54.24 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்–மந்திரியான சந்திரசேகர் ராவுக்கு சொந்தமாக கார் இல்லை. மேலும் இவருக்கு ரூ.8.89 கோடி கடன் இருப்பதாகவும் அந்த வேட்புமனுவில் கூறப்பட்டு உள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.1 கோடி அதிகரித்து உள்ளது.

மேலும் சந்திரசேகர் ராவ் மீது 64 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் தெலுங்கானா பிரிவினை தொடர்பான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story