சபரிமலை நடைத்திறப்பு; திருப்தி தேசாய் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாதவகையில் தொடர் போராட்டம்


சபரிமலை நடைத்திறப்பு; திருப்தி தேசாய் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாதவகையில் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 12:15 PM GMT (Updated: 16 Nov 2018 12:15 PM GMT)

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்வதாக கூறிய திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத வகையில் போராட்டம் தொடர்கிறது.

சபரிமலை,

 மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில்  பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் சென்ற அவர் வெளியே பிரவேசிக்க முடியாத வகையில் போராட்டக்குழுவினர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டு உள்ளதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரமாக தேசாய் வெளியேற முடியாத நிலை உள்ளது. அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் விமான நிலையம் செல்லும் நிலை உள்ளது. கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதற்கு காங்கிரசும், பா.ஜனதாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் இவ்விவகாரம் அரசியலாக்கப்படுகிறது, பா.ஜனதா அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது எனவும் ஆளும் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. 

Next Story