நான்கு ரூபாய்க்கு உணவு: நடமாடும் உணவகத்தை துவக்கி வைத்தார் ரோஜா எம்.எல்.ஏ


நான்கு ரூபாய்க்கு உணவு: நடமாடும் உணவகத்தை துவக்கி வைத்தார் ரோஜா எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 18 Nov 2018 8:09 AM GMT (Updated: 2018-11-18T13:39:13+05:30)

ஆந்திரா நகரியில் ரூ. 4 க்கு உணவளிக்கும் நடமாடும் ஒய் எஸ் அண்ணா என்னும் உணவகத்தை ரோஜா எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

நகரி,

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இவர் நகரி தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அத்துடன் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பிறந்தநாளை தனது நகரி தொகுதியில் கொண்டாடினார். 

அப்போது அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடமாடும் உணவகத்தை துவக்கி வைத்தார்.  ஒய் எஸ் அண்ணா என பெயர் சூட்டப்பட்ட உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து நடிகை ரோஜா செய்தியாளரிகளிடம், கூறியதாவது:

"மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து இடங்களிலும் இத்தகைய நடமாடும் உணவகம் மூலம் தரமான உணவுகள் வழங்கப்படும். பொதுமக்கள் என்னை சுலபமாக அணுக வசதியாக ”நம்ம எம் எல் ஏ” என்னும் மொபைல் ஆப் ஒன்றை  துவக்கி உள்ளேன்." என தெரிவித்தார்.

4 ரூபாய்க்கு நடமாடும் ஓய்.எஸ். உணவகம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story