இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சர்


இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சர்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:19 AM GMT (Updated: 2018-11-19T16:49:22+05:30)

இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏழு வயதுடைய ஒரு சிறுவனை அவரது டியூஷன் டீச்சர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அவரை தாக்கும் காட்சிகள் 
 சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சுமார் ஆறு நிமிட நீளமுள்ள அந்த வீடியோ பதிவில் அந்த ஆசிரியர் அந்த சிறுவனின் தலைமுடியை பிடித்து ஆட்டிக்கொண்டு அவரை தாக்குகிறார். மேலும், அவர் அந்த சிறுவனை கண்ணாடி போன்ற ஒரு மென் பொருளைக்கொண்டு பயப்படும் வகையில் அவரை சரமாரியாக தாக்குகிறார். இவ்வளவு கொடுமைகளும் போதாதது என அந்த ஆசிரியர் அந்த பையனின் விரல்களை எடுத்து அவற்றைக் கடிக்கிறார். மேலும், அவர் ஒரு கிளாஸ் தண்ணீரைக் அவனிடம் கொடுத்து, சிரிக்குமாறு கேட்கிறார்.

இந்த சம்பவம் முழுவதும் முழுவதும் மூடப்பட்ட அறை ஒன்றில் ஒன்றில் நடந்துள்ளது. அந்த அறைக்குள் அந்த சிறுவனை அந்த ஆசிரியர் மனசாட்சியே இன்றி மிருகத்தனமாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்  சென்று உள்ளது.

இது குறித்து சிறுவனின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்த மனிதர் என் குழந்தைக்கு என்ன செய்தார் என்பதை நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், "நான் வீட்டில் அந்த வீடியோ பதிவை பார்க்கும் பொது என்மகனின் அழுகையை என்னால் கேட்கமுடியவில்லை என அவர் கூறியுள்ளார். 

இந்த மிருகத்தனமான தாக்குதலை கண்டறிந்த சிறுவனின் தந்தை அந்த ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளத்தால் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த ஆசிரியருக்கு எதிராக ஐபிசி பிரிவு 307 (கொலை செய்ய முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி அவுதுோஷ் திவிவேதி தெரிவித்துள்ளார். Related Tags :
Next Story