தேசிய செய்திகள்

ஒருசில மாதங்களில் 7 திருமணம் ; கணவர்களை ஏமாற்றி லட்சகணக்கில் கொள்ளை - இளம் பெண் கைது + "||" + AP woman weds 7 men, vanishes with gold

ஒருசில மாதங்களில் 7 திருமணம் ; கணவர்களை ஏமாற்றி லட்சகணக்கில் கொள்ளை - இளம் பெண் கைது

ஒருசில மாதங்களில் 7 திருமணம் ; கணவர்களை ஏமாற்றி  லட்சகணக்கில் கொள்ளை - இளம் பெண் கைது
ஆந்திராவில் ஒருசில மாத இடைவெளியில் அடுத்தடுத்து 7 பேர்களை திருமணம் செய்த இளம்பெண் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடப்பா,

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம்  கித்தலூர் என்ற பகுதியை சேர்ந்த மோனிகா (வயது 32) பணக்கார இளைஞர்களை தேர்வு செய்து காதலித்து அவரை திருமணம் செய்து அதன்பின் சில நாட்களில் அந்த இளைஞரிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரையும் சமீபத்தில் மோனிகா திருமணம் செய்து அவரிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இதனையடுத்து ராமகிருஷ்ணா ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் மோனிகாவிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் இதேபோல் ஏழு பணக்கார வாலிபர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மோனிகா, அவரது தந்தை ஆனந்தா ரெட்டி மற்றும் மோனிகாவின் நண்பர் சண்டி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...