2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டி கிடையாது சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு


2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டி கிடையாது சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
x

2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது கிடையாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய பிரதேச எம்.பி.யும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடப்போவது கிடையாது என அறிவித்துள்ளார். இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுஷ்மா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் தகவல் தெரிவித்துவிட்டதாகவும், முடிவெடுக்க வேண்டியது அவர்களை சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டி கிடையாது என அறிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், உடல்நிலையை காரணமாக காட்டியுள்ளார். சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story