தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இருந்து எம்.பி. விலகல்


தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இருந்து எம்.பி. விலகல்
x
தினத்தந்தி 20 Nov 2018 7:26 PM GMT (Updated: 2018-11-21T00:56:15+05:30)

தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இருந்து, எம்.பி. ஒருவர் விலகினார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. கொண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதில், விசுவாசமான தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், மக்களிடம் இருந்து கட்சியும், அரசும் விலகிச் சென்று விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இவர், சேவல்லா தொகுதி எம்.பி. ஆவார்.

Next Story