அந்தமானில் அமெரிக்க சுற்றுலாப் பயணி பழங்குடியின மக்களால் கொலை

அந்தமான் சுற்றுலாச் சென்ற அமெரிக்க நாட்டு இளைஞர் அங்குள்ள பழங்குடியின மக்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போர்ட் பிளேர்,
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான ஜான் ஆலன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றார். அந்தமான் சென்ற இவரை, 7 மீனவர்கள் பிற மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாத பழங்குடியின மக்கள் வசிக்கும் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செண்டினல் தீவு என அழைக்கப்படும் அந்த தீவில், அமெரிக்க சுற்றுலாப் பயணியைக் கண்டதும், பழங்குடியின மக்கள் வில் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் சுற்றுலாப்பயணி பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணியை செண்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது. 2011 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரிய வந்தது. உலகின் மற்ற இடங்களுடனும் நபர்களுடனும் இந்த பழங்குடியின மக்கள் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story