தேர்தலில் போட்டியிட மாட்டேன் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு ; கணவர் வரவேற்பு


தேர்தலில் போட்டியிட மாட்டேன் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு ; கணவர் வரவேற்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 9:48 AM GMT (Updated: 2018-11-21T15:18:49+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சுஷ்மா சுவராஜ் அறிவிப்புக்கு சுஷ்மாவின் கணவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் விதிசா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வருகிறார். இதனால் அவர் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்வதும் இல்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு(2019) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சுஷ்மா சுவராஜ் நேற்று இந்தூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “நான் போட்டியிடுவது பற்றி கட்சிதான் முடிவு செய்யவேண்டும். எனினும், உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்னும் முடிவுக்கு என் மனநிலையை மாற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில்  வரும்  நாடாளுமன்ற தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று சுஷ்மா சுவராஜ் முடிவெடுத்துள்ளதற்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஓட்டப்பந்தய வீராங்கனை மில்க்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓட்டத்தை நிறுத்திவிட்டார். மேலும் 1977 இல் இருந்து 41 ஆண்டுகளாக 11 தேர்தல்களில் சுஷ்மா போட்டியிட்டதையும், 47 ஆண்டுகளாக அவருக்குப் பக்கப்பலமாகத் தான் இருந்து வருவதையும் சுவராஜ் கவுசல் குறிப்பிட்டுள்ளார். 

Next Story