சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை
x
தினத்தந்தி 21 Nov 2018 2:03 PM GMT (Updated: 2018-11-21T19:33:03+05:30)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை,


வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காற்றுடன் மிதமாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரங்களுக்கு மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story