மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: முக்கிய பொருளாதார நாடுகளில் முதலிடத்தில் இந்தியா 2-வது இடத்தில் சீனா


மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: முக்கிய பொருளாதார நாடுகளில் முதலிடத்தில்  இந்தியா 2-வது இடத்தில்  சீனா
x
தினத்தந்தி 23 Nov 2018 10:49 AM GMT (Updated: 2018-11-23T16:19:54+05:30)

2019 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. சீனா 6.5 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டது.

புதுடெல்லி, 

நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (FY19) சீனாவை விட இந்திய பொருளாதாரம் வேகத்தை அதிகரித்து உள்ளது என  சில மதிப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன.

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம்  மற்றும் 7.9 சதவீதத்திற்கு  இடையே மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவிகிதம் ஆகும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரத்தை உருவாக்கும்.

இருப்பினும் இந்தியாவின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டில் சாதனை படைத்ததை விட குறைவாக உள்ளது. மேலும் வளர்ச்சி FY19 இரண்டாம் பாதியில் மேலும் குறைவாக  இருக்கும் என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. முதல் காலாண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டியது. இது ஒன்பது காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.

தொடர்ச்சியான வளர்ச்சியானது நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்ததற்கு  காரணம்  உலகளாவிய தலைவர்களின் எதிர்ப்பை மீறி  உயர்ந்த கச்சா விலைகள் உட்பட  ஒரு பலவீனமான ரூபாய் மற்றும் சீரற்ற பருவமழை என எக்னாமிக்ஸ் டைம்ஸ்  தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம்  நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண்ணிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானத்துறை, நுகர்வு மற்றும் சேவைத் துறையில் முன்னேற்றம் ஆகியவை எதிர்மறையான காரணிகளை ஈடுகட்டுகின்றன. மதிப்பீடுகளை  மேற்கோளிட்டு  அறிக்கைகள் கூறுகின்றன. முதல் காலாண்டில் வர்த்தக வாகனங்களின் விற்பனை 37.82 சதவீதமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலாண்டு வளர்ச்சியைப் பற்றி நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில், FY19 க்கு 7.5 சதவிகிதம் முழு ஆண்டு மதிப்பீட்டிற்கு இணங்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி அதன் FY19 வளர்ச்சி மதிப்பீட்டை 7.4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. செய்தித்தாள்களின்படி, ஏஜென்சிகளிலிருந்து எட்டு மதிப்பீடுகள் சராசரியாக 7.5 சதவீதமாக இருந்தது.

Next Story