“ஓட்டு போட்டு வெற்றிபெறச் செய்யாவிட்டால் வி‌ஷம் குடிப்பேன்” பா.ஜனதா அமைச்சர் தற்கொலை மிரட்டல்


“ஓட்டு போட்டு வெற்றிபெறச் செய்யாவிட்டால் வி‌ஷம் குடிப்பேன்” பா.ஜனதா அமைச்சர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 23 Nov 2018 2:57 PM GMT (Updated: 23 Nov 2018 2:57 PM GMT)

தேர்தலில் ‘‘வெற்றி பெறாவிட்டால் வி‌ஷம் குடிப்பேன்’’ என பிரசாரத்தில் பா.ஜனதா அமைச்சர் தற்கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்ப்பூர்,  


சட்டசபை தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில், ராஜஸ்தானும் அடங்கும். ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 7–ந் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா இடையே போட்டி பிரசாரம் நடக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்புக்கள் வெளியாகி வருகிறது. அரசுக்கு எதிராக விமர்சனங்கள் இருப்பினும் பா.ஜனதாவும் நம்பிக்கையுடன் களம் காணுகிறது. அம்மாநிலத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருப்பவர் சாந்த் கிருபளானி. 

பா.ஜனதாவை சேர்ந்த இவர் சித்தோர்கர் மாவட்டம் நிம்பஹரா தொகுதியில் 3–வது முறையாக போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். ‘‘நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றிபெறச் செய்யாவிட்டால், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்’’ என்று அவர் கூறினார். இதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் மென்மையாகவே குறிப்பிட்டேன். தொகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளதால், அந்த அடிப்படையில் ஓட்டு கேட்டேன்’’ என்று குறிப்பிட்டார். 

Next Story