முன்னாள் மத்திய ரயில்வே மந்திரி ஜாபர் ஷரிஃப் காலமானார்

முன்னாள் மத்திய ரயில்வே மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜாபர் ஷரிஃப் காலமானார்.
பெங்களூரு,
முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜாபர் ஷரிஃப் (வயது 85) கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஜாபர் ஷரிஃப் காலமானார். அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மூத்த காங்கிரஸ் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜாபர் ஷரிஃப் பல முறை எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ரயில்வே மந்திரிகளில் மிகச்சிறந்த ஒருவர், கர்நாடகாவின் சொந்த மகன் ஸ்ரீ சி.கே.ஜஃபர் ஷரீஃப் காலமானார். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story