போலீசார் முன் வாலிபர் கொலை: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


போலீசார் முன் வாலிபர் கொலை: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 30 Nov 2018 8:45 PM GMT (Updated: 30 Nov 2018 8:14 PM GMT)

போலீசார் முன் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் ராஜேந்திரா என்கிற மனு (வயது 28) என்ற வாலிபரை போலீசார் பிடித்து தங்கள் வாகனத்தில் வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கிராம மக்கள் சிலர் மனுவை வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த மாதம் 26-ந்தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் மாநிலம் முழுவதும் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கண்முன்னே அரங்கேறிய இந்த கொலை சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியானது.

எதன் அடிப்படையில் தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரபிரதேச தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


Next Story