மும்பை நிறுவன அதிகாரிகள் மீது வெனிசுலா பெண் என்ஜினீயர் பாலியல் புகார்
மும்பை நிறுவன அதிகாரிகள் மீது, வெனிசுலா பெண் என்ஜினீயர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
வெனிசுலா நாட்டை சேர்ந்த பெல்கிஸ் காம்போஸ் (வயது 23) என்ற இளம்பெண் என்ஜினீயர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அவரிடம் அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தனக்கு பயிற்சி ஏற்பாடு செய்த சர்வதேச மாணவர் அமைப்பிடம் அந்த இளம்பெண் புகார் கூறினார். ஆனால் இது குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைப்போல மொராக்கோவை சேர்ந்த ஒரு இளம்பெண் பயிற்சியாளரும் கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மேற்படி தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த புகார்கள் குறித்து ஏற்கனவே விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

Related Tags :
Next Story