பெட்ரோல் விலை 36 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு


பெட்ரோல் விலை 36 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 6:37 AM IST (Updated: 1 Dec 2018 6:37 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.26 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 39 காசுகள் குறைந்து  ரூ.75.62 ஆக விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.71.52காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 36 காசுகளும், டீசல்  விலை லிட்டருக்கு  40 காசுகளும் குறைந்துள்ளன. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.26- க்கும்,  டீசல் ரூ 71.12 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாய் அமைந்துள்ளது. 

Next Story