இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் : ராகுல் காந்தி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
உதய்பூர்,
வரும் 7-ஆம் தேதி இராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜகவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. உதய்பூரில் தொழில் அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி பேசியதாவது:- “மோடியின் சர்ஜிக்கல் தாக்குதல் போல, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. மன்மோகன் சிங்கிடம் வந்த ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்போவதாக கூறினர். மேலும், இதை ரகசியம் காக்க விரும்புவதாகவும் கூறினர்.
ஆனால், பிரதமர் மோடி, சர்ஜிக்கல் தாக்குதலை , அரசியல் லாபமாக மாற்றப்பார்க்கிறார். உண்மையில், சர்ஜிக்கல் நடத்த எடுத்த முடிவு ராணுவத்தினுடையது. உத்தர பிரதேச தேர்தலுக்காக ராணுவ மூலதனத்தை தனது அரசியல் மூலதனமாக மோடி மாற்றிக்கொண்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார்.
வங்கிகளின் செயல்படாத மூலதனம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் மோடி அரசின் கீழ் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு சரியான அரசாங்கம் இருந்தால், சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும். தனக்கு அனைத்தும் தெரியும் என மோடி நினைக்கிறார். இந்துயிசத்தின் சாராம்சம் என்ன? கீதை சொல்வது என்ன? இது அனைவருக்கும் தெரியும். ஆனால், நமது பிரதமர் தான் ஒரு இந்து என சொல்லிக்கொள்கிறார். ஆனால், இந்துயிசத்தின் அடிப்படை கூட தெரியாமல் அவர் உள்ளார்” இவ்வாறு ராகுல் பேசினார்.
Related Tags :
Next Story