நில ஒதுக்கீடு வழக்கு: அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஹூடா மீது குற்றப்பத்திரிகை - தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல்
நில ஒதுக்கீடு வழக்கில், அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஹூடா மீது தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு பஞ்ச்குலா என்ற இடத்தில் முன்பு அரியானா மாநில அரசு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த காங்கிரஸ் தலைவரும், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான மோதிலால் வோரா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பூபிந்தர் சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகியோர் மீது தனிக்கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட மனை பிரிவை கடந்த 2005-ம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு மறுஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.67 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story