கஜா புயல் பாதித்த மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் - சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது


கஜா புயல் பாதித்த மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள் - சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 2 Dec 2018 12:55 AM IST (Updated: 2 Dec 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதித்த மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பானுமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து துணிமணிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேர்ந்தன. இந்த பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு நேற்று மாலை டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்த பொருட்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. சென்னையில் ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகிகள் அவற்றை பெற்று, புயல் பாதித்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Next Story