அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 2 Dec 2018 1:05 AM IST (Updated: 2 Dec 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ஜார்ஜ் புஷ் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உலகத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் அவர் சிறந்த தலைவராக செயல்பட்டார்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story