மேகதாது அணை விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை


மேகதாது அணை விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 2 Dec 2018 1:15 AM IST (Updated: 2 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில், சட்ட நிபுணர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததுடன், அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கும் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகதாது அணைக்கு தமிழக அரசின் எதிர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்கொள்வது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story