மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சியா? - வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி செய்தது குறித்த வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்னா,
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சத்னா என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் புஷ்கர் சிங் தோமர் உடனே கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Related Tags :
Next Story