ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்


ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்
x
தினத்தந்தி 5 Dec 2018 12:18 AM IST (Updated: 5 Dec 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.

இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.



Next Story