மதுரையில் எய்ம்ஸ் - மத்திய அரசு அனுமதி: நிர்மலா சீதாராமன் நன்றி


மதுரையில் எய்ம்ஸ் - மத்திய அரசு அனுமதி: நிர்மலா சீதாராமன் நன்றி
x
தினத்தந்தி 17 Dec 2018 3:34 PM GMT (Updated: 2018-12-17T21:04:41+05:30)

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ்  அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்து  டுவீட் செய்துள்ளார்.

Next Story