ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

ராகுல்காந்தி கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.
புதுடெல்லி,
ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா காதில் கிசுகிசுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ''மோடி செய்ய முடியாதவற்றை நீங்கள் செய்து விட்டதாக சொல்லுங்கள். கேள்விகள் கேட்க வேண்டாம்'' என்று ஜோதிராதித்யா சிந்தியா ராகுல் காந்தியிடம் கூறுகிறார்.
அந்த வீடியோவை டிவிட்டரில் தனது பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, ராகுல் காந்திக்கு தன்னுடைய பேச்சிலேயே நம்பிக்கை இல்லை. அதனால் தான் என்ன பேச வேண்டும் என்று மற்றவர்கள் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. தற்போதெல்லாம் கனவு காண கூட அவருக்கு டியூஷன் தேவைப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
आजकल सपना दिखाने के लिए भी ट्यूशन लेनी पड़ती है ??? pic.twitter.com/Z6ZL3MOQhq
— Smriti Z Irani (@smritiirani) December 18, 2018
Related Tags :
Next Story