பஞ்சாப், அரியானாவில் கடும் குளிர்


பஞ்சாப், அரியானாவில் கடும் குளிர்
x
தினத்தந்தி 19 Dec 2018 5:31 PM GMT (Updated: 2018-12-19T23:01:35+05:30)

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

சண்டிகர்,

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த இரு மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை வழக்கத்தை விட மிக குறைவாக இருக்கிறது. தொடர்ந்து அங்கு கடும் குளிர் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாபின் ஆதம்பூரில்  வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்தது. அதை தொடர்ந்து பரித்கோட்டில் 2.5 டிகிரியாகவும், பதிண்டாவில் 3 டிகிரியாகவும் வெப்ப நிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Next Story