மத்திய மந்திரிகளுடன், பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு கஜா புயல் பாதிப்பை விளக்கினார்


மத்திய மந்திரிகளுடன், பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு கஜா புயல் பாதிப்பை விளக்கினார்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-21T01:14:58+05:30)

மத்திய மந்திரிகளை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கஜா புயல் பாதிப்பை விளக்கினார்.

புதுடெல்லி, 

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கஜா புயலால் தமிழக தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்தும், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்தும் விளக்கி கூறினார். அதற்கு வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், ‘எனது அமைச்சகத்தின் முழு ஒத்துழைப்பையும் தமிழக விவசாயிகளுக்கு கொடுப்பேன்’ என்று உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், மாநில செயலாளர் எஸ்.கே. வேதரத்தினம், மாநில விவசாய அணி தலைவர் பொன் விஜயராகவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Next Story