மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அன்னா ஹசாரே அறிவிப்பு


மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அன்னா ஹசாரே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 1:52 PM GMT (Updated: 2018-12-22T19:22:43+05:30)

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.

மும்பை,

லோக்பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்கவில்லை என்று மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2014-ம் ஆண்டு அமல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுவரை எந்த சட்டத்தையும் நடைமுறைபடுத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்த போதிலும், பிரதமர் மோடி அரசாங்கம் லோக்பால், லோக் ஆயுக்தாக்களை நியமித்ததில்லை. லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றும் எண்ணம் தற்போதைய அரசுக்கு இல்லை. எனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் அன்னா ஹசாரே தற்போது தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story