காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி


காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Dec 2018 9:36 AM GMT (Updated: 2018-12-23T15:06:39+05:30)

காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மத்திய சென்னை, வடசென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜகவினருடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

நகரமயமாக்கலை சவாலாக கருதாமல், வாய்ப்பாக கருத வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள் தான் இடம்பெறும். இதில், தமிழகத்தில் உள்ள 3 நகரங்கள் இடம்பெறும்.

வரும் காலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் போல், எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கப் போகிறது. காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி, மக்கள் நலனை மறந்து சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story