94-வது பிறந்தநாள்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #AtalBihariVajpayee
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.
हम सबके प्रिय, पूर्व प्रधानमंत्री स्वर्गीय अटल बिहारी वाजपेयी जी को उनकी जयंती पर शत-शत नमन।
— Narendra Modi (@narendramodi) December 25, 2018
Tributes to Atal Ji on his Jayanti. We reiterate our commitment towards creating the India he dreamt of. pic.twitter.com/CnD1NtQCWp
पूर्व प्रधानमंत्री आदरणीय अटल जी ने अपनी दूरदर्शिता और विकासनीतियों से देेेश में विकास और सुशासन के नए युग की शुरुआत की थी। अटल जी केे ही दृढ़ नेतृत्व में भारत पोखरण में परमाणु परीक्षण करके और कारगिल युद्ध में दुश्मनों को मुंहतोड़ जवाब देकर एक शक्तिशाली राष्ट्र के रूप में उभरा। pic.twitter.com/fftnPNO1Df
— Amit Shah (@AmitShah) December 25, 2018
Related Tags :
Next Story